காருலகின் கடவுளாம் கண்கண்ட தெய்வமாம்
பேருலகை வாழவைக்கும் பெருமைமிகு ஆற்றலாம்
கண்ணால் கண்டு காலைகரம் கூப்பினால்
கண்ணை நன்றாய் காக்குமே
இச்சையோடு பச்சையத்தில் இதமாய்
ஒளிபுகுத்தவே
பச்சைக்காயும் பல்தானியமும் பலமாய்
விளைந்தே கொட்டுமே
பகலெல்லாம் பயணித்து
இரவுக்கு ஏங்குமே
முகமதி காணவே முனைப்பும் மிககாட்டுமே
ஒளியை உமிழ்ந்து உணர்த்த மதியும்
களி கூர்ந்தே ஒளிர்ந் திடுமே
மதியும் இணைய மறுத்தே ஒளியை
மதியாய் உள்வாங்க
விதியென கலங்குமே
விழித்த இரவு வேதனை
யால்
பழித்து மதியை பலியாக்க இயலாதே
சிவந்த முகமாய் சினமோடு காலையில்
சிரம் தாழ வைக்கும் கதிரவனே
-சிவ.சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி