வாரா ரய்யா வாராரு
தங்கக் குதிரே மேல வாராரு
பள பளன்னு பட்டூடுத்தி
கள்ளழகர் வாராரு
காண்போர் கண்கள் சொக்கிட
காடு கழனி களெல்லாம்
செழிக்க வைக்க
சீறும் சிங்கமாய் சிலிர்க்க வைத்திட
வாராரய்யா வாராரு
துவளும் மனங்களின் துயர் துடைக்க வாராரு
வஞ்சனை செய்பவர்களை வேரறுக்க வாராரு
வாராரய்யா வாராரு
வான்மழை பொழிய வைத்து
சுட்டெரிக்கும் வெயிலை போக்கி
தண்ணீர் பூ மழை பொழிய
மகிழ்ச்சி துள்ளலில்
மக்கள் வெள்ளத்தில்
மிதந்து மிதந்து வாராரு
-நல.ஞானபண்டிதன்
திருப்புவனம் புதூர்