கவின் தம்பி கயிலனின் பிறந்தநாள் அன்று. தெருவில் உள்ள கவின் நண்பர்களைப் பிறந்த நாளுக்கு கவின் அம்மா அழைத்திருந்தாள். எதேச்சையாக கவின் தாத்தாவும் அம்மாச்சியும் வந்திருந்தார்கள்.
கவின் தாத்தா எதையும் வித்தியாசமாக செய்பவர். எந்த ஒன்றிலும் அறிவியலும் அறிவும் இணைந்திருக்கவேண்டும் என்பார். அது பயன் அளிப்பதாக இருக்கவேண்டும் என்றும் நினைப்பார்.
கவின் அம்மா சொன்னான்.. பிறந்த நாளுக்கு வரும் பிள்ளைகள் பரிசுகள் வாங்கி வருவார்கள். பதிலுக்கு நாமும் அவர்களுக்குப் பரிசுகள் தரலாம் என்று சொன்னாள்.
நல்ல யோசனை என்றார்கள்.
கவின் அப்பாவும் அம்மாவும் போய் வரும் பிள்ளைகளுக்குக் கொடுக்கப் பரிசுப்பொருட்களை வாங்கி வந்து விட்டார்கள்.
அப்போதுதான் கவின் தாத்தா அந்த யோசனையைச் சொன்னார்.
முதலில் யோசித்தார்கள். ‘
எதுக்கு இதெல்லாம் என்று கேட்டார்கள்.
பரிசு கொடுப்பது பயனுடையதாகப் பிள்ளைகள் உணரவேண்டும் என்று சொன்னார கவின் தாத்தா.
சரியென்று தலையாட்டினார்கள்.
இருபது பிள்ளைகள் பெண்பிள்ளைகள் ஆண்பிள்ளைகள் எனக் கலந்து வந்திருந்தார்கள். ஒருசிலர் அதில் பரிசுப்பொருட்கள் வாங்கி வந்திருந்தார்கள்.
பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடினார்கள்.
முடிந்ததும் வந்திருந்த பிள்ளைகளை வரிசையாக உட்கார வைத்துக் கவின் தாத்தா சொன்னார்.
உங்கள் எல்லோருக்கும் நன்றி. கயிலன் பிறந்த நாளுக்கு வந்தமைக்காக. இப்போது உங்களுக்குக் கவின் அப்பா, அம்மா பரிசுகள் தரப்போகிறார்கள். அதற்குமுன் சின்ன போட்டி என்றதும் குழந்தைகள் மௌனமானார்கள்.
பயப்படவேண்டாம். உங்களுக்கு என்ன தெரியுமோ அதை இங்கே செய்து காட்டினால் போதும்.. என்றார். கொஞ்சநேரம் அமைதி நிலவியது. பிள்ளைகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். சட்டென்று ஒரு பெண்குழந்தை எனக்குத் திருக்குறள் தெரியும் என்றது.
பிரமாதம்.. சொல்லுப்பா என்றார் கவின் தாத்தா. கடகடவென்று திருக்குறளைச் சொல்லி முடித்ததும் எல்லோரும் கைதட்டுங்கள் என்று சொல்லக் கைதட்டினார்கள்.. உடனே கவின் அப்பாவும் அம்மாவும் பரிசுப்பொருள் ஒன்றை எடுத்து அந்தப் பெண்பிள்ளைக் கையில் கொடுக்க அது உற்சாகமாகிவிட்டது.. தேங்க்ஸ் ஆண்டி அங்கிள் என்றது. உடனே மற்ற பிள்ளைகள் உற்சாகமானார்கள்.
ஒருவன் பாடத்தெரியும் என்றான்.. நான் நன்றாக ஓவியம் வரைவேன் என்றான்.. எனக்கு யானை, புலி மாதிரி கத்தத்தெரியும் என்றான்.. ஒருவன் நான் மாஜிக் செய்வேன்.. என்றான். உற்சாகமாகச் செய்தார்கள். கவின், கயிலன் அப்பாவும் அம்மாவும் பரிசுப்பொருட்களைக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள்