பிச்சை கேட்கும்...
பச்சிளம் குழந்தையை ...
பார்க்கும் பொழுது ...
பாவமாய் இருக்கிறது ...
பிள்ளை வரம் கேட்டு...
கோயில், குளம் எறி...
வேண்டுதல் வைக்கும்...
தாயின் வயிற்றில் ...
பிறந்திருக்கக் கூடாதா ...!
எதிர்வினை...( கவிதை)
மழையில் நனைந்து விடாமல் ...
இருக்க ...
இடம் தேடி ஒதுங்கினேன் ..
ஒதுங்கிய இடத்தில் ...
படுத்திருந்த நாய் ...
பயந்துபோய் ஓடியது ...
மழையில் நனைந்தபடி...
பஸ் பயணம்...( கவிதை)
பேருந்து பயணத்தில்...
நான் வசதியாக...
அமர்ந்து கொண்டு...
வேடிக்கை பார்த்து வந்தேன் ...
ஆனாலும்...
மனசு படபடத்தது...
படிக்கட்டில்...
தொற்றிக்கொண்டு ...
பயணம் செய்பவர்களைப்...
பார்த்த பொழுது ...
உயிர் பலி ...(கவிதை)
ஆழ்துளை கிணற்றில்...
குழந்தை விழுந்துவிட்ட ...
செய்தி பரவியதும்...
அக்கம் பக்கம் வசிப்போர் ...
அவசரமாய் ஓடி வந்தார்கள் ....
விளையாட போன ..
தங்கள் குழந்தையை ...
தேடுவதற்கு ...
சிந்திய ரத்தம் ...(கவிதை)
கறி குழம்பு வாசனை..
ருசித்தது ...
ருசியாய் சாப்பிட்டு...
முடித்த பிறகு...
கோவில் பக்கம் வந்தேன் ...
கோவிலுக்கு முன்பு...
வெட்டப்பட்ட...
ஆட்டின் ரத்தம் ...
சிதறி கிடந்தது...
சிந்தி இருந்த...
ரத்தத்தை பார்த்த பொழுது ...
வெட்டப்பட்டு....
தனியாய் விழுந்த...
ஆட்டின் தலை அச்சுறுத்தியது...
கவிதை:
ரெட்டியார்பட்டி ஸ் மணிவண்ணன்.