அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி படுகொலை தொடர்பான 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1963 இல் ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கென்னடி படுகொலை தொடர்பாக லீ ஹார்வி ஓஸ்வால் என்ற நபர் கைது செய்யப்பட்டார். கென்னடி ஏன் படுகொலை செய்யப்பட்டார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் வெளிவராத சூழலில் தற்போது விசாரணை ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன