புரொபசர் சுந்தரம் கல்லூரியில் மிகவும் பாபுலர்.திறமைசாலி மற்றும் நேர்மையானவர். கடின உழைப்பால் மட்டுமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்.இது அவர் மனைவி விமலா மகள் சித்ரா மகன் கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்கள் மாணவர்கள் எல்லோருக்கும் தெரியும்.
சுந்தரம் அன்று காலை கல்லூரிக்கு புறப்பட தயார்படுத்திக் கொண்டிருந்தார். போன் ஒலித்தது. போனை எடுத்த விமலா " என்னங்க உங்களுக்குத்தான் போன் மும்பையில் இருந்து" என்று கணவரிடம் கொடுத்தாள்.
போன் கால் முடிந்ததும் " விமலா அடுத்த புதன் கிழமை நான் மும்பை போக வேண்டும். கொளன் பனேகா குரோர்பதி புரோகிராமில் கலந்து கொள்ளப் போகிறேன்" என்று சொல்லி விட்டு கல்லூரி க்கு புறப்பட்டு விட்டார் சுந்தரம்.
அன்று இரவு டின்னர் டைம். மகனும் மகளும் அப்பாவை ப் பிலி பிலி என்று பிடித்துக் கொண்டு விட்டார்கள். "ஏம்பா உன் கொள்கை க்கு சரிப்பட்டு வராத கொளன் பனேகா குரோர்பதி புரோகிராம்கு எப்படிப்பா நீ போகலாம்? மனைவி விமலாவுக்கு கணவன் சுந்தரத்தின் மேல் அசாத்திய நம்பிக்கை.அவர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று.அதனால் அவர் சுந்தரத்திடம் எதுவும் கேட்கவில்லை.
சுந்தரம் சொன்னார் "இதைப்பற்றி யாரும் பேச வேண்டாம்.புரோகிராமில் செலக்ட் ஆகி ஜெயித்தால் இதற்கு பதில் சொல்கிறேன்"
அன்று கொளன் பனேகா குரோர்பதி புரோகிராம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
Fastest Finger ரௌண்டில் ஜெயித்து ஹாட் சீட்டில் அமர்ந்தார் சுந்தரம். எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்து 25 லட்சம் வரை வந்து விட்டார் சுந்தரம். "ப்ரில்லியன்ட் பெர்பார்மன்ஸ் மிஸ்டர் சுந்தரம்" என்று கமெண்ட் அடித்தார் அமிதாப்.
அடுத்தது ஐம்பது லட்சத்திற்கான கேள்வி.
Which planet in the solar system has the shortest year and the longest day?
Answers:
Option 1: Mars
Option 2: Mercury
Option 3: Jupiter
Option 4: Neptune
சுந்தரம் 25 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக சொன்னார். ஆடியன்ஸ் poll, 50:50,போன் எ ஃப்ரெண்ட் என்ற எந்த ஆப்ஷன்ஸ்ம் உபயோகிக்காமல் இந்த லெவல் வரை வந்தவர் திடீரென்று விலகுவதாக சொன்னதால்அதிர்ச்சியடைந்தார் அமிதாப் பச்சன்.
பல முறை வற்புறுத்தியும் கேட்காததால் ரூபாய் 25 லட்சத்துடன் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள அனுமதி அளித்து சுந்தரத்திடம் செக் கொடுத்து விட்டு கேட்டார் அமிதாப்.
" மிஸ்டர் சுந்தரம் இந்த கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. சரியான விடை என்ன, ஏன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டீர்கள், இந்தப் பணத்தை எப்படி செலவு செய்யப் போகிறீர்கள் என்று சொல்ல முடியுமா"
"நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர்.நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்"என்று ஆரம்பித்தார் சுந்தரம்.
"ரூபாய் 50 லட்சத்திற்கான கேள்வி க்கு சரியான விடை: Option 2 : Mercury.
எனக்கு தேவையாக இருப்பது ரூபாய் 25 லட்சம் மட்டுமே.அதற்குமேல் கிடைத்தால் அதில் எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் அந்த கேள்விக்கு சரியான பதில் தெரிந்திருந்தும் நான் சொல்லவில்லை.
ரூபாய் 25 லட்சம் எப்படி செலவு செய்யப்போகிறீர்கள் என்று கேட்டீர்கள்.அந்த மொத்த பணத்தை யும் என் அப்பா வின் கம்பெனி பேங்கில் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட உபயோகப் படுத்துவேன். என் தந்தையும் அவரது நண்பரும் பார்டனராக இருந்து நன்றாக நடந்து கொண்டிருந்த பிஸினஸில் பார்ட்னர் என் தந்தையை ஏமாற்றி விட்டு லோன் பாக்கி வைத்து விட்டு வெளிநாடு சென்று விட்டார்.என் தந்தை ஆறு மாதத்திற்கு முன் இறந்து விட்டார்.
இறப்பதற்கு முன் அவர் என்னை எப்படியாவது இந்த பேங்க் லோன் ஐ திருப்பிக் கட்டிவிடு என்றுசொல்லியிருந்தார். நானும் அவருக்கு வாக்கு கொடுத்திருந்தேன். இவ்வளவு பெரிய தொகையை என் சம்பளத்திலிருந்து சேர்த்து கடன் திருப்பிக் கட்டுவது முடியாத காரியம். அதனால்தான் கடின உழைப்பு இல்லாமல் பணம் சம்பாதிப்பது என் கொள்கைக்கு எதிராக இருந்தாலும் நான் இந்த புரோகிராமில் கலந்து கொண்டேன்
அது என் தந்தைக்கு நான் செய்யும் கடமை. இதில் எனக்கு உதவிய கொளன் பனேகா குரோர்பதிக்கும் உங்களுக்கும் என் நன்றி."என்று சொல்லி முடித்தார்.
அரங்கில் பலத்த கைதட்டல்! ஒரே கரகோஷம். அமிதாப் பச்சன் புரொபசர் சுந்தரத்தைத் கட்டித் தழுவி பாராட்டினார்.
தன் கண்ணில் வழிந்த ஆனந்தக் கண்ணீரை துடைத்தார் டிவியில் லைவ் புரோகிராம் பார்த்துக் கொண்டிருந்த விமலா.
" கங்ராட்ஸ் டாடி! We are proud of you"
வாட்ஸ் அப்பில் மெஸேஜ் அனுப்பி விட்டார்கள் சித்ராவும் கார்த்திக்கும்!
- முரளிதரன் ராமராவ், புனே