tamilnadu epaper

கேரள அரசு ரூ.817 கோடி ஒதுக்கீடு 62 லட்சம் பேருக்கு நலத்திட்ட ஓய்வூதியம்

கேரள அரசு  ரூ.817 கோடி ஒதுக்கீடு  62 லட்சம் பேருக்கு நலத்திட்ட ஓய்வூதியம்

சமூகப் பாதுகாப்பு மற்றும் நல நிதி ஓய்வூதிய பயனாளிகளுக்கு மார்ச் மாதத்தில் மேலும் ஒரு தவணை ஓய்வூதியம் வழங்கப்பட்டுள் ளது. இதற்காக ரூ.817 கோடி ஒதுக்கப் பட்டுள்ளதாக கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் அறிவித்தார். இதன் மூலம் சுமார் 62 லட்சம் பேர் தலா ரூ.1,600 பெறுவர். பயனாளிகள் வியாழக்கிழமை முதல் ஓய்வூதியம் பெறத் தொடங்குவார்கள். 26 லட்சத் துக்கும் அதிகமான மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் சென்றடையும். மற்றவர்களுக்கு, கூட்டுறவு வங்கிகள் மூலம் அவர்களின் வீடுகளுக்கே சென்று ஓய்வூதியம் வழங்கப்படும்.