கிருஷ்ணகிரி, ஏப்.10 -
மத்தூர் அருகே உள்ள கொடமாண்டபட்டி மின்சார வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட மாதம்பதி முருகன் கோவில் அருகே உள்ள (டிரான்ஸ்பரம்) மின்மாற்றி பழுதாகியுள்ளது. 15 நாட்களாகியும் இது வரை பழுது பார்க்கப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். விவசாயிகள் மோட்டார் பம்ப் செட் இயக்க முடியாததால் பயிர்கள் அனைத்தும் கருகி வீணாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மின்மாற்றி சீர்படுத்த பலமுறை மனுக்கள் அளித்தும் மின் வாரியத்தினர் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். வாடும் பயிரைக் கண்டு விவசாயிகளும்,குடிக்கக்கூட நீரின்றி பொதுமக்களும் அவதிப்பட்டு வருவதால் வட்டாட்சியர் தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.