tamilnadu epaper

சத்தீஷ்கார்: ஆயுதங்களை கைவிட்டு 15 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

சத்தீஷ்கார்: ஆயுதங்களை கைவிட்டு 15 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

ராய்ப்பூர்,


சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.


குறிப்பாக, கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. பாதுகாப்புப்படையினர் நடத்தும் அதிரடி தாக்குதல்களில் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையால் பல நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். அதேவேளை, நக்சலைட்டுகள் திருந்தி வாழ அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பயனாகவும் அரசின் முயற்சிகளாலும் நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு வருகின்றனர்.


இந்நிலையில், சத்தீஷ்காரின் தண்டிவாடா மாவட்டத்தை சேர்ந்த 15 நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரணடைந்துள்ளனர். இதில் ஒரு பெண் நக்சலைட்டும் அடக்கம்.