பென்னாகரம் ஒன்றியம் செங்கனூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான
ஏப்ரல் - 14 ந்தேதியை
முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவுபடி நடைபெற்ற உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி
உறுதி மொழியை வாசிக்க பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும் சாதிகளின் பெயரால் நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களினுடைய உரிமை, சமத்துவம் போன்றவற்றிற்காக தன் வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கனவை நனவாக்கும் விதமாக சக மனிதர்களிடம் சமத்துவம் கடைபிடிக்க வேண்டும் என்பன
உள்ளிட்ட உறுதி மொழிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அம்பேத்கர் அவர்களின் இளமைக்கால கல்வி மற்றும் இளமையில் கல்வி கற்பதற்கு ஏற்பட்ட தடைகள் பற்றியும் இந்திய நாட்டினுடைய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கியவது உள்ளிட்ட கருத்துக்கள் பற்றி
மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்
வளர்மதி, கல்பனா,
திலகவதி, ராஜேஸ்வரி,
அனுப்பிரியா
உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.