நாமக்கல், ஏப்.15-
ராசிபுரத்திலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்றி ஓடிய சம்பவத்தில், பேருந்தை முறையாக பரிசோதனை செய்யாத ராசிபுரம் கிளை மேலாளர் உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திங்களன்று காலை அரசுப் பேருந்து புறப்பட்டு சேலம் நோக்கி சென்று கொண்டி ருந்தது. பேருந்தை பாலசுந்தரம் என்பவர் இயக்கி யுள்ளார். 20க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். ராசிபுரத்தை அடுத்த வைர ஆஞ்சனேயர் கோவில் எதிரே சென்றபோது, திடீரென பேருந்தின் முன் பக்க இடதுபுற சக்கரம் கழன்று ஓடியது. இதனால் பேருந்து நிலை தடுமாற, பயணிகள் கூச்சலிட்டனர். அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பாலசுந்தரம் உடனடி யாக பேருந்தை நிறுத்தினார். இதுகுறித்து ராசிபுரம் பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதன்பேரில், பணியாளர்கள் வந்து கழிவுநீர் ஓடையில் கிடந்த சக்கரத்தை எடுத்து மீண்டும் பேருந்தில் பொருத்தினர். பயணிகள் மாற்றுபேருந்து மூலம் சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சரி யான நேரத்தில் ஓட்டுநர் திறம்பட செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடா்பாக பணிமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, சேலம் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்கு நர் ஜோசப் டயஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், சாலையில் கழன்று ஓடிய அந்த பேருந்தின் முன் பக்க சக்கரம் கடந்த மார்ச் 9 ஆம் தேதிதான் சர்வீஸ் செய்யப்பட்டது. அதன்பின் நடைபெற்ற வாராந்திர பராமரிப்புப் பணியின்போது சக்கர அசைவுகள் சரி யாக உள்ளதா? என்பதை பரிசோதித்திருந்தால் இச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம். எனவே, இந்தப் பணியை முறையாக மேற்கொள்ளாத தொழில்நுட் பப் பணியாளர்கள் 4 பேர், முறையாக கண்காணிக் காத மேற்பார்வையாளர்கள் 2 பேர், பணிமனை கிளை மேலாளர் ஆகிய 7 பேரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என தெரி விக்கப்பட்டுள்ளது.