வந்தவாசி, மே 13:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த திரக்கோவில் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அலமேலு மங்கா சமேத ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் சந்நிதியில் சித்திராபௌர்ணமி உற்சவம்-கஜேந்திர மோட்சம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. குளக்கரையில் மண்டகப்படியில் விசேஷ திருமஞ்சனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்பு கருட வாகனத்தில் உற்சவ மூர்த்தி அலங்காரம் செய்யப்பட்டு வீதி புறப்பாடு நடைபெற்றது. பெருமாள் கையில் இருந்து சக்கரம் புறப்பட்டு முதலை வாயில் பிடிபட்டுள்ள யானையை காப்பாற்றும் கஜேந்திர மோட்சம் வைபவம் தத்ரூபமாக நடைபெற்றது. இதில் சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள பஜனைப் குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.