திருவண்ணாமலை மாவட்டம் 8.5.2025 கீழ்பென்னாத்தூரில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்று விளங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் முன்னிட்டு திருக்கோயில் முன்பாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனை முன்னிட்டு சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கணேச சுவாமிகள்,கோபிச் செட்டிபாளயம் ஈரோடு திருஞானசம்பந்தர் திருமுறை மடம் ஸ்ரீ சிவாக்கர சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதின கடலூர் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோர் அருளாசியும், வாழ்த்துரை வழங்கி பேசினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி-அம்மனை வேண்டி வணங்கி வழிபட்டனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை