தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள நீராவி புதுப்பட்டியில் உள்ள ஸ்ரீ காளியம்மன்,ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
இதில் ஸ்ரீ காளியம்மன் மற்றும் துர்க்கை அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் உட்பட சிறப்பு பூஜைகள் நடந்தது,அதனைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் விரதம் இருந்து கும்மி பாடல்கள் பாடி முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக முக்கிய விதிகள் வழியாக சென்று அய்யனார் கோவில் குளத்தில் கரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நிராவி புதுப்பட்டி கம்மவார் சங்க நிர்வாகிகள் பாலமுருகன்,பாலகிருஷ்ணன்,ராமமூர்த்தி,சுப்புராமன்,சங்கரசுப்பு,நடராஜன்,நவநீதன், இராமதாஸ, சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.