tamilnadu epaper

சிலி ஓபன் டென்னிஸ்: ரித்விக் ஜோடி சாம்பியன்

சிலி ஓபன் டென்னிஸ்: ரித்விக் ஜோடி சாம்பியன்

புதுடெல்லி:

சான்டியாகோவில் நடைபெற்று வந்த சிலி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரித்விக் சவுத்ரி போலி பள்ளி, கொலம்பியாவின் நிக்கோலஸ் பாரியன் டோஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் ரித்விக், நிக்கோலஸ் ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் மேக்ஸிகோ கோன்சாலஸ், ஆந்த்ரஸ் மோல்டெனி ஜோடியை வீழ்த்தியது.