tamilnadu epaper

சேராம்பட்டு அருள்மிகு ரேணுகாதேவி என்கிற எல்லை அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு:

சேராம்பட்டு அருள்மிகு ரேணுகாதேவி என்கிற எல்லை அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு:


செய்யாறு மே. 13,


செய்யாறு அடுத்த சேராம்பட்டில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோயில் எழுந்தருளி உள்ளது.


இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மூலவரான அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அருள்மிகு ரேணுகா தேவி என்கின்ற எல்லையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


சுவாமி திருவீதி உலா நிகழ்வும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .கோயில் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது.