பிரபல தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான கிரிதேஷூக்கு திடீரென்று ஒரு வினோதமான ஆசை.
ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தால் என்ன?
தமிழகத்தின் நம்பர் ஒன் டைரக்டரான ஷாம்பரத்தையும், ஹீரோயினாக தமிழகத்தின் முன்னணி நடிகை விஷ்ணுதாராவையும், தான் ஹீரோவாக நடித்துத் தயாரிக்கும் படத்திற்கு புக் செய்தார்.
நிலக்கரி நிறத்தில் இருக்கும் கிரிதேஷூக்கு துளிகூட நடிப்பு வரவில்லை.
டைரக்டர் ஷாம்பரத்திற்கு தூக்கம் காணாமல் போயிற்று. கிரிதேஷ் ஹீரோவாக நடித்தால் படம் எப்படி ஓடும்? தன்னுடைய பெயரும் கெட்டுவிடுமே எனக் கவலைப்பட்டார்.
கிரிதேஷிடம் கெஞ்சிக்கூத்தாடி ஒரு மாத காலத்திற்கு அவருக்கு நடிப்புப் பயிற்சி அளிப்பதென முடிவு செய்தார்.
முதல் வாரம் ஹீரோவாக நடிப்பதற்கு பல "டிப்ஸ்"களை வழங்கினார் டைரக்டர் ஷாம்பரத்.
அடுத்த மூன்று வாரங்களுக்கு பிரபல நடிகர்களைக் கொண்டு எப்படி நடிக்கவேண்டும் என "டிப்ஸ் " வழங்கச் செய்தார்.
முதல் நாள் ஷூட்டிங்!
ஹீரோவான “சர்வர்” கேரக்டரில் முதல் ஷாட்டிலேயே சொதப்ப ஆரம்பித்தார்- பல “டிப்ஸ்"களோடு நடிக்க வந்த கிரிதேஷ்!
*- ரிஷிவந்தியா,*
*தஞ்சாவூர்.*