கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சான்டோ டொமின்கோவில் கடந்த 8ம் தேதி அதிகாலை இரவு விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இரவுவிடுதியில் இருந்தனர். மேற்கூரை இடிந்ததில் பலர் இடிபாடுகளில் புதைந்தனர். கடந்த 3 நாட்களாக நடந்த மீட்பு பணியில் பலி எண்ணிக்கை 221 ஆக அதிகரித்தது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 3 நாள் மீட்புப் பணியில் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை என்பதால் மாயமானவர்களின் உறவினர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
இச்சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் முடிந்துவிட்டன. காயமடைந்தவர்களை மீட்பதிலும், இடிபாடுகளை அகற்றுவதிலும், மீட்புப்படையினர் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அவசர கால செயல்பாட்டு மையத்தின் இயக்குனர் ஜுவான் மானுவல் மென்டெஸ் கூறுகையில்,இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது. இடிபாடுகளில் இருந்து 189 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.பேரிழிவுக்கான காரணம் தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை என்றார்.