tamilnadu epaper

தினம் ஒரு திவ்ய தேசம்

தினம் ஒரு திவ்ய தேசம்

ஆயர்பாடி*(ஆய்ப்பாடி, கோகுலம்), டெல்லி

 

மூலவர் : நவமோகன கிருஷ்ணன் 

தாயார் : ருக்மணி, சத்திய பாமா 

 

இத்தலத்தருகே யமுனை நதி ஓடுகிறது.

சிறையில் தேவகி மைந்தனாகப் பிறந்து, ஆயர்பாடி நந்தகோபர் வீட்டுக்கு கண்ணன் வந்த நாள், ஆண்டுதோறும் *நந்தோற்சவம்* என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது

 

கிருஷ்ணர் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர்பாடியான கோகுலம் ஆகியவை விரஜபூமியில் உள்ளன. 285 கிமீ சுற்றளவு கொண்ட விரஜபூமியை வலம் வருவது ‘விரஜ் பரிக்ரமா’ என்று அழைக்கப்படுகிறது.

 

பாகவதம் உள்ளிட்ட வடமொழி நூல்கள், ஆயர்பாடி பற்றியும் நவமோகன கிருஷ்ணனைப் பற்றியும் கூறியுள்ளன. துவாபர யுகத்தில் திருமால் கண்ணனாக அவதரித்தார். அவரது குழந்தைப் பருவம் கோகுலத்தில் கழிந்தது. கண்ணன் சிறு பாலகனாக இருந்தபோது செய்த குறும்புகள், ஒவ்வொரு வீடாகச் சென்று வெண்ணெய் உண்டது, மாடு மேய்த்தது, பூதகியைக் கொன்றது, கம்ச வதம் செய்தது ஆகியவற்றைப் பற்றி எண்ணற்ற பாசுரங்களில் ஆழ்வார்கள் அருளிச் செய்துள்ளனர்.

 

கீதா ராஜா சென்னை