tamilnadu epaper

நாமம் போடுறது என்றால் என்ன?

நாமம் போடுறது என்றால் என்ன?

 -மண்ணச்சநல்லூர் பாலசந்தர்


`திருமண்’


வராஹ அவதாரத்தின் போது, மகாவிஷ்ணு வெள்ளை வெளேரென்று உள்ள தன் பற்களால் உலகையே தூக்கி நிறுத்தினார். அவருடைய பற்கள் பட்ட இடங்களில் `ச்வேத மிருத்திகை’ எனும் வெள்ளை மண்கட்டிகள் உருவானதாம். 


அதைப் போன்ற வெள்ளை மண்ணை, `திருமண்’ என்று வைணவர்கள் நாமமாகப் போட்டுக் கொள்கிறார்கள். வைணவர், சைவர், மாத்வர் அனைவருமே நெற்றியில் மட்டுமின்றி, மார்பு, வயிறு, புஜங்கள், மணிக்கட்டு முதலிய இடங்களில், நாமமோ, விபூதியோ, சந்தனமோ, இட்டுக் கொள்வார்கள். 


கேசவ, 

நாராயண,

 மாதவ, 

கோவிந்த, 

விஷ்ணு, 

மதுசூதன, 

திரிவிக்ரம், 

வாமன, 

ஸ்ரீதர, 

ஹ்ருஷிகேச,

 பத்மநாப, 

தாமோதர, 

ஆகிய 12 பெயர்களும் திருமாலுக்கு விசேஷமானவை.


 பெருமாளின் இந்த 12 பெயர்களை, அதாவது நாமாக்களை கூறிக் கொண்டே, வைணவர்கள் தங்கள் உடலில் 12 இடங்களில் திருமண் இட்டு கொள்வார்கள். நாமாக்களை சொல்லி அணிவதால், `நாமம் போடுதல்’ என்று ஆயிற்று.