இருக்கும் போதே
தெரிவதில்லை
அவர்கள்
அருமையும்
அதன்
அருமையும்
இப்போதெல்லாம்
தெரிகிறது
எல்லோரின்
அருமையும்
எல்லாவற்றின்
அருமையும்
இழந்தோரை
நினைத்து
இருப்போரையும்
இழந்து
விடலாகாது
இழந்தோரிடம்
காட்டாத
அன்பை
கொள்ளாத
அக்கறையை
பேசாத
பேச்சை
இருப்போரிடம்
இல்லாது
பார்த்துக்
கொள்கிறேன்
தவறு
நடந்தது
தப்பு
நடக்காது
பார்த்துக்
கொள்கிறேன்
ஆயிரம்
அறிவுரை
சொல்லாததை
ஒரு
அனுபவம்
சொல்லுகிறது
இருப்போரை
பார்த்துக்
கொள்ளலாம்
இழந்தோரை...
அவர்களிடமும்
அன்பு
காட்ட
அக்கரை
கொள்ள
பேசாததை
பேச
விருப்பம்தான்
ஆதங்கம்தான்
என்
செய்வது
அவர்களையும்
சந்திக்க
ஆசைதான்
வெகு தூரமில்லை
வந்தடைவேன்
என் வேளை
வந்ததும்...
-ஆறுமுகம் நாகப்பன்