திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அருள்மிகு ஸ்ரீ.ரகுமாயி சமேத ஸ்ரீ பாண்டுரங்கன் ஆலயம் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் வெவேறு அலங்காரங்களுடன் காட்சிதரும் பெருமாள் தமிழ் வருடப்பிறப்பு சித்திரைத் திருநாளில் குருவாயூரப்பன் தோற்றத்தில் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தருகிறார். இவ்வாண்டும் இவரது காட்சி தமிழ் வருடப்பிறப்பான ஏப்ரல் 14 ஆம் நாள் நடைபெற உள்ளது. அயல்நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் இவ்வாலயத்துக்கு வருகைதந்த வண்ணம் உள்ளனர். ஆலய பராமரிப்பு அற்புதமாக உள்ளது. பக்தகோடிகள் தங்குவதற்கு ஆலய விடுதிகள் இங்குள்ளன. காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்கிற மார்க்கத்தில் தென்னாங்கூர் அமைந்துள்ளது.