tamilnadu epaper

நெல் வயல்

நெல் வயல்


ஊருக்கு வெளியே பாருங்கள்

பரந்தே கிடக்கும் நெல்வயல்

உழவுத் தொழிலின் சிறப்பினைச்

சொல்லித் தந்திடும் நெல்வயல்.


காற்றில் மெலிதாய் ஆடியே

கண்ணைக் கவரும் நெல்வயல்

பச்சை வண்ணப் பட்டுபோல

மண்ணை மாற்றும் நெல்வயல்.


பறவைபோல் சிறுசிறு உயிர்களும்

தேடியே வருகின்ற நெல்வயல்

கதிர்கள் முற்றி விளைந்தபின்

பொன்னாய் மின்னும் நெல்வயல்.


அழகாய் அறுவடை முடிந்ததும்

அமுதினை அள்ளி வழங்கியே

பாரினில் வாழும் மக்களின்

பசியைத் தீர்த்திடும் நெல்வயல்.


-கீர்த்தி