"எள்ளை கொட்டினால் பொறுக்கிவிடலாம்;சொல்லை கொட்டினால் பொறுக்க முடியுமா?" பத்மாவும்" />
"என் கண் முன்னே நிக்காதே. எங்கேயாவது போய், செத்து தொலை" என்று அம்மா லட்சுமியை திட்டி, வெளியேற்றினான் சாரங்கன்.
"எள்ளை கொட்டினால் பொறுக்கிவிடலாம்;சொல்லை கொட்டினால் பொறுக்க முடியுமா?" பத்மாவும் வயதான மாமியார் என்று தடுக்க வில்லையே?
ஆதங்கபட்ட லட்சுமி ,தன் அக்கா பையன் ரகுவும் அவன் பெண் கோதையும் சென்றமுறை ஆதரவாக கவனித்துக்
கொண்டது
ஞாபகத்துக்கு
வரவே. அந்த ஊருக்கு பயணபட்டாள் . .
.
இந்த அஞ்சு வருடத்தில் அவர்களின் அன்பான பேச்சு.அரவணைப்பு லட்சுமி பாட்டிக்கு, அஞ்சு வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயத்தை மறக்க செய்தது.
.
ஏகாதசியன்று திடீரென லட்சுமிக்கு நெஞ்சு வலி வரவே,ஆஸ்பத்திரியில் சேர்த்ததும் உயிர் பிரிந்தது.
அதே ஆஸ்பத்திரியின்
.எட்டாவது தளத்தில்.
ஐ ந் து வருடங்கள் முன்பு ,
அம்மாவை வீட்டை விட்டு விரட்டிய பாவம் தான் , பத்மா விற்கு இன்று ஆக்சிடெண்ட்.ஆகி இரண்டு கண்களும் பார்வை போனதுக்கு காரணம் என்று புலம்பினான்.சாரங்கன்.
.
சற்றுமுன் இறந்து போனவர் கண்களை ,உங்கள் மனைவிக்கு பொறுத்தி உள்ளோம்.என்று டாக்டர் சொல்லவே. கண் தானம் பண்ணிய நபரை பார்த்ததும் அதிர்ச்சி .
கடந்த வருடம் உன் அம்மா இதே ஆஸ்பத்திரியில்
உடல் உறுப்பு தானம் ,கண் தானம் கொடுக்க ஒப்புதல் கடிதம் கொடுத்தருந்தாள்.
"நீ கொடுமை செய்தும் இன்று உன் மனைவிக்கு தானம் செஞ்சு
மறுபிறவி கொடுத்துள்ளாள்.
ரகு சொல்ல சொல்ல அம்மாவின் உடலை பார்த்து துக்கம் தாளாமல் அழுதான் சாரங்கன்.
-ஆனந்த் ஸ்ரீனிவாசன்
சென்னை 89