பசுமையும் பன்மையும் நிறைந்த சோலை போல
அசைவின் அலைகள் மகிழ்வோடு மீண்டும் மீண்டும்,
படர்ந்த சாலைகளில் மக்கள் கூட்டம்,
அவசர ஓசையில் துள்ளும் காலடிகள்,
நகரத்தின் நெஞ்சில் ஓர் அலை ஓயாதது.
பண்டிகையின் கோலாகலத்தில் தேவையான பொருட்களை வாங்க ஆசையான ஒரு கூட்டம்
மின்னலாய் மிளிரும் விளக்குகளின் வரிசை,
ஆர்ப்பரிக்கும் ஆட்டம், கொண்டாட்டத்தின் சிகரம்,
பட்டாசு புகை மாய்ந்து விரியும் வெளிச்சம்,
பரிமாற்ற மழைபோல
மத்தாப்புக்கள் மின்ன
மனங்கள் இணைவது. எத்தனை அழகு ....
இசை ஓசையில் இளைப்பாறும் கணங்கள்,
களியாட்டத் தோரணம் ஆட்டம் அழகு,
தோழமை அசைவில் மனம் தொடும் ராகம்,
கண்ணீர் சிரிப்போடு கலந்து, ஓர் பெருமகிழ்வு.
அதுதான் பண்டிகை கோலாகலத்தின் ஆராவாரமோ...
கோலாகலமாய் ஒவ்வொரு சுவாசத்தும்,
ஒரு சிறு சுகம், ஒரு பெரிய கனவு,
உருக்கமாக உருமாறும் உறவுகள்,
அமைதி கிடைத்த ஆசையின் நதி.
கோலாகலமாய் வாழும் உயிரில் பிறப்பது சந்தோஷம்
சுமை மறந்து புன்னகை பரவ,
வழியிலெல்லாம் ஓர் நினைவு விதைக்க,
நகரம் விழிக்கிறது பண்டிகை என்ற கோலாகலத்தை சந்திக்க ....
உஷா முத்துராமன்