tamilnadu epaper

பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: செயின்ட் பீட்ஸ், டான் போஸ்கோ அணிகள் சாம்பியன்!

பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: செயின்ட் பீட்ஸ், டான் போஸ்கோ அணிகள் சாம்பியன்!

சென்னை:

சென்னையில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற ‘கால்பந்து சாம்பியன்ஷிப் 2025’ தொடரில் செயின்ட் பீட்ஸ், டான் போஸ்கோ அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.


சென்னையின் எஃப்சி, நார்விச் சிட்டி எஃப்சியுடன் இணைந்து தமிழகத்தில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு பல்லவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி பள்ளிகளுக்கு இடையிலான ‘கால்பந்து சாம்பியன்ஷிப் 2025’ தொடர் சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி பள்ளியில் கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கியது.


இதில் 12 மற்றும் 14 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் 64 அணிகள் பங்கேற்றன. ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்த தொடரில் இரு பிரிவுளிலும் மொத்தமாக 1,150 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.


12 வயதுக்குட்பட்டோர் பிரிவு இறுதிப் போட்டியில் செயின்ட் பீட்ஸ் அணி, மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷுட் அவுட்டில் செயின்ட் பீட்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.