ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இணைய சேவைக்கு தற்காலிக அனுமதி கொடுத்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. லோ எர்த் ஆர்பிட் (LEO) செயற்கைக்கோள்கள் வழியாக இணைய சேவையை வழங்கும் நிறுவ னங்களில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறு வனம் தொழில்நுட்ப ரீதியாக முதன்மையான நிறுவனமாக உள்ளது. பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் உத்தரவைத் தொடர்ந்து ஸ்டார் லிங்க் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஷாசா பாத்திமா தெரிவித்துள்ளார்.