அலங்காநல்லூர். மே.20.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் இந்து முன்னணி மதுரை புறநகர் அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பில் வேல்பூஜை மற்றும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.இந்த நிகழ்வில் முருகனின் திருவுருவப்படம், வேல் வைத்து சிறப்பு பூஜைகள் தீபாரதனை நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் மத்திய அரசு வழக்கறிஞர் முத்துக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவகுமார், தலைமை தாங்கினார்,ஒன்றிய தலைவர் சுவேந்திரன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் ஏ.வி. பார்த்திபன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் ஒழிக்க பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர். இந்த கூட்டத்தில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.இதில் நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.