tamilnadu epaper

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்


புதுடெல்லி, மார்ச் 27–

மக்களவையில் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன்சிங் கூறியதாவது: 

பாஜ அரசு 2014 ம் ஆண்டு ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தை தொடங்கியதிலிருந்து, நாட்டில் பால் உற்பத்தி 63.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இதை 15 சதவீதம் அதிகரிக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

உலகில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போதைய 239 மில்லியன் மெட்ரிக் டன்னில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் 300 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். நாட்டில் சுமார் 10 கோடி பேர் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர், அதில் 75 சதவீதம் பேர் பெண்கள். இந்தியாவில் தனிநபர் பால் நுகர்வு 471 கிராம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.