tamilnadu epaper

பிளஸ் 2 தேர்வில் 599 மார்க் எடுத்து பழனி மாணவி முதலிடம் 'வங்கி அதிகாரியாக விருப்பம்'

பிளஸ் 2 தேர்வில் 599 மார்க்  எடுத்து பழனி மாணவி முதலிடம்   'வங்கி அதிகாரியாக விருப்பம்'


பழனி, மே 9–


பழனி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஓவியாஞ்சலி, 600க்கு, 599 மார்க் பெற்றுள்ளார். 


பழனிநெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் கணக்கர். இவரது மனைவி சாந்தி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிகிறார்.இவர்களது மகள் ஓவியாஞ்சலி. பழனி


பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர், பிளஸ் 2 தேர்வில் 600க்கு 599 மதிப்பெண் பெற்றுள்ளார். 

 தமிழ், வணிகவியல் பொருளியல், கணக்கியல் கணினி பயன்பாடு, தமிழ் ஆகிய பாடங்களில், 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். மாணவியை, பள்ளிச் செயலர் குப்புசாமி, நிர்வாக அலுவலர் சிவக்குமார், முதல்வர் கதிரவன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சக மாணவர்கள் பாராட்டினர்.


ஓவியாஞ்சலி கூறியதாவது:


10, 11, பொது தேர்வுகளிலும் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளேன். ஆசிரியர்கள், பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். சமூக வலைதளத்தில் கால விரயம் செய்வது கிடையாது. வங்கி அதிகாரியாக ஆசைப்படுகிறேன். இளங்கலை பட்டப் படிப்பை முடித்த பிறகு, போட்டித் தேர்வுகளில் பங்கேற்க உள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.