tamilnadu epaper

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அமைச்சர் பதில்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அமைச்சர் பதில்


புதுடெல்லி, மார்ச் 30– 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்ற இறக்கமின்றி 2022 மே 22 முதல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மார்ச் 14ம் தேதி இவற்றின் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டது. 

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு 70 டாலருக்கு கீழாக (சுமார் ரூ.6 ஆயிரம்) குறைந்தது. அப்போது முதல் (கடந்த செப்டம்பர் முதல்), பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுபற்றிய கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பதில் அளித்தார். அப்போது அவர், ‘‘கச்சா எண்ணை விலை குறையும் போக்கு தொடர்ந்தால் மட்டுமே, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றிய எதிர்பார்ப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும்’’ என்றார்.