பேராவூரணி அருகே மரக்கன்றுகள் நடும் பசுமை பாரத விழா - முடநீக்கியல் மருத்துவர் துரை.நீலகண்டன் மரக்கன்றுகள் நட்டார்
குற்றாலத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவ சங்க மாநாட்டை முன்னிட்டு, தமிழக முழுவதும் நடைபெற்று வரும் பசுமை பாரத விழாவின் நிகழ்வாக, பேராவூரணி அருகே அடைக்கத்தேவன் கிராமத்தில், முடநீக்கியல் மருத்துவர் துரை.நீலகண்டன் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்வில், பலன் தரும் மரக்கன்றுகளான மா, சப்போட்டா, பொய்யா, எலுமிச்சை முதலிய கன்றுகளும், நிழல் தரும் மரங்களான புங்கை, வேப்பங்கன்று முதலிய கன்றுகளும் நடப்பட்டன. நிகழ்வில், மாநாட்டின் நோக்கம், பாரத பசுமை விழாவின் முக்கியத்துவம் குறித்து மருத்துவர் துரை.நீலகண்டன் விளக்கிப் பேசினார். நிகழ்வில், அஞ்சல் துறை ஓய்வு வீரமணி, விசாகன், அக்ரி ஆர்.ஏ.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.