tamilnadu epaper

மகிழ்ச்சி

மகிழ்ச்சி


அன்பான சொந்தங்கள் கூடியிருத்தல் மகிழ்ச்சி


ஆகாயவிமானமதில் பயணம் செய்ய மகிழ்ச்சி


நோய்நொடிகள் அண்டாமல் வாழ்வதுதான் மகிழ்ச்சி


படிப்பிற்கேற்ற உத்தியோகம் உள்ளம் நிறை மகிழ்ச்சி


பட்டுமெத்தை பாயானாலும் நிறை நித்திரை மகிழ்ச்சி


உதவும் குணம் உடனிருக்க உன்னத மகிழ்ச்சி


துன்பத்திலும் இன்பம்காணும் இயல்பு அது மகிழ்ச்சி


துவண்டு போகா மனந்தன்னை பெறுவதுவே மகிழ்ச்சி


சுற்றம் சூழ வாழ்வதுதான் மட்டற்ற மகிழ்ச்சி


இல்லார்க்கு கொடுத்துதவும் எண்ணமது மகிழ்ச்சி


அன்பான வாழ்க்கைத் துணை அன்றாடம் மகிழ்ச்சி


அறிவான பிள்ளைச்செல்வம் பெருமைகொள் மகிழ்ச்சி


முதுமையிலும் நடக்கும்திறன் மிகப்பெரிய மகிழ்ச்சி


முதியோர் இல்லம் செல்லாமல் இருப்பதுவே மகிழ்ச்சி


உண்மையை உரக்கச் சொல்லும் தைரியமே மகிழ்ச்சி


பொய்யான விவகாரம் தவிர்ப்பதுவே மகிழ்ச்சி 


ஏழையின் சிரிப்பில் இறைவன் தெரிவது எந்நாளும் மகிழ்ச்சி


-வி பிரபாவதி

மடிப்பாக்கம்