இதுகுறித்து மணிப்பூர் மாநில காவல் துறை அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவம் அமைப்பைச் சேர்ந்த 2 பேர் இம்பால் மேற்கு மாவட்டத்தின் திங்கு சாலை பகுதியில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும் பிரிபாக் (புரோ) அமைப்பைச் சேர்ந்த 2 பேர் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் டாப் மகா லீகாய் பகுதியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இதுதவிர, இம்பால் கிழக்கு மாவட்டத்தின் தகெல் மமாங் லீகாய் பகுதியிலிருந்து காங்கே யவோல் கன்னா லுப் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட சட்டவிரோத செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.