மதுரை, மே 9–
மதுரை வருமான வரித்துறையின் தலைமை கமிஷனர் சஞ்சய் ராய் ஓய்வு பெற்றார். அவரது இடத்தில் பெங்களூருவில் முதன்மை கமிஷனராக பணியாற்றிய வி.எஸ்.ஸ்ரீலேகா, மதுரையின் புதிய தலைமை கமிஷனராக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.
கடந்த, 1992 பேட்ச் ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான இவர், திருவனந்தபுரத்தில் சிவில் இன்ஜினியரிங், பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் முதுகலை பட்டமும் படித்தார்.
கேரளாவில் 2 ஆண்டுகள், மும்பையில் 4 ஆண்டுகள், சென்னையில் 7 ஆண்டுகள், பெங்களூருவில் 18 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மதுரையில் பொறுப்பேற்ற அவரை, முதன்மை கமிஷனர் வசந்தன், இணை கமிஷனர் சிவாஜி, துணை கமிஷனர்கள் சதீஷ்பாபு, சாந்தசொரூபன், மாதுரி உட்பட பலர் வரவேற்றனர். திருச்சி, தஞ்சை உட்பட 19 மாவட்டங்களின் வருமான வரி அதிகாரியாக இவர் பணியாற்றுவார்.