tamilnadu epaper

மியான்­மர் பெண்ணை மணந்த நெல்லை வாலி­பர்

மியான்­மர் பெண்ணை  மணந்த நெல்லை வாலி­பர்


திரு­நெல்­வேலி, ஏப். 1௦–

மியான்­மர் பெண்ணை நெல்லை வாலி­பர் காதல் திரு­ம­ணம் செய்து கொண்­டார்.

நெல்லை டவுன் பகு­தியை சேர்ந்­த­வர் மகேஷ் சுப்­பி­ர­ம­ணி­யன். வியட்­நா­மில் இன்­ஜி­னி­ய­ராக பணி­யாற்றி வரும் இவ­ரு­டன் மியான்­மரை சேர்ந்த துகின் லீதாய் என்­ப­வ­ரும் வேலை செய்து வரு­கி­றார். அப்­போது அவர்­க­ளுக்­குள் ஏற்­பட்ட நட்பு காத­லாக மாறி­ய­தால் கடந்த ௭ ஆண்­டு­க­ளாக காத­லித்து வந்­த­னர்.  

தொடர்ந்து இரு­வ­ரும் திரு­ம­ணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு வீட்­டார் சம்­ம­தத்­து­டன் நெல்லை டவு­னில் உள்ள மண்­ட­பத்­தில் தமிழ் முறைப்­படி திரு­ம­ணம் செய்து கொண்­ட­னர். தொடர்ந்து இரு வீட்­டாரை சேர்ந்­த­வர்­க­ளும் திரு­மண தம்­ப­தி­க­ளுக்கு வாழ்த்­து­களை தெரி­வித்­த­னர்.

மண­மக்­கள் மகேஷ் சுப்­பி­ர­ம­ம­ணி­யன், துகின் லீதாய் கூறும் போது, ‘‘நாங்­கள் ஏழு ஆண்­டு­க­ளாக காத­லித்து வந்­தோம். இது­கு­றித்து எங்­கள் வீட்­டா­ரு­டன் தெரி­வித்து இரு தரப்பு சம்­ம­தத்­து­டன் தற்­போது திரு­ம­ணம் செய்து கொண்­டோம். தமிழ் பாரம்­ப­ரி­யம், கலா­சார முறைப்­படி இந்த திரு­ம­ணம் நடந்­தது எங்­க­ளுக்கு மகிழ்ச்­சியை அளித்­துள்­ளது’’ என்­ற­னர்.