tamilnadu epaper

முதலமைச்சர் இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சர் இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஏப்.9 -

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவிக்கையில், “சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீ கரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 15.8.2025 அன்று நடைபெறும் சுதந்திரதின விழாவில் வழங்கப்பட உள்ளது. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். 1.4.2024 அன்று 15 வயது நிரம்பிய வராகவும், மார்ச் 31.3.2025 அன்று 35 வயதுக்குள்ளா கவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2024-2025) அதாவது 1.4.2024 முதல் 31.3.2025 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவ ராக இருத்தல் வேண்டும் (அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்). விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாக வும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணி யாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2025 மாலை 4 மணி வரை. இணையதளம் மூலம் விண் ணப்பித்த உடன் அனைத்து விண்ணப்பதாரர்கள் தங்களு டைய சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரிடம் சான்றிதழ் சரிபார்ப்பதற் காக ஒப்படைக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தகுதியுள்ள நபர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறும், மேலும் விவ ரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண். 7401703498 (அ) 04322-222187 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.