tamilnadu epaper

யானை

யானை


யானை பெரிய யானை

வலிமை கொண்ட யானை

குடும்ப மாக வாழும்

கூர்த்தா அறிவைக் கொண்டது!


தாவர உண்ணி யானை

தடித்தத் தோலைக் கொண்டது

தும்பிக் கையை உடையது

தூக்கும் பெரிய மரத்தையும்!


இரண்டு தந்தம் கொண்டது

அகன்ற பாதம் உடையது

மடலைப் போன்ற காதுகள்

மூளை மிகவும் பெரியது!


அறிவிற் சிறந்த யானையை

அழகாய்ப் பார்த்து மகிழலாம்

சிறந்த கேட்கும் திறனையே

சீர்மை யாகக் கொண்டது!



முனைவர்

இராம.வேதநாயகம்