" விடியங்காட்டியுமா வேண்டாம் சாமி.."

 

"காலையில சாப்பிட்டா கிக்கா இருக்கும்டா"

 

" ஆமாடா.. வெறுவயித்துல எப்படி சாப்பிடுறது..."

 

"வெறும் வயித்துலதான்டா சாப்பிடனும்.. அதுலதான் ஒரு சுகம் இருக்கு." />

tamilnadu epaper

ரசீது!

ரசீது!

"ஒரு கட்டிங் மட்டும் போடுடா..."

 

" விடியங்காட்டியுமா வேண்டாம் சாமி.."

 

"காலையில சாப்பிட்டா கிக்கா இருக்கும்டா"

 

" ஆமாடா.. வெறுவயித்துல எப்படி சாப்பிடுறது..."

 

"வெறும் வயித்துலதான்டா சாப்பிடனும்.. அதுலதான் ஒரு சுகம் இருக்கு. அதுலயும் விடியங்காட்டியும் நல்லா குளிச்சிட்டு, புத்தாடை அணிஞ்சிட்டு, பவுடர் செண்டுனு அடிச்சிட்டு, வெயில் இறங்கறதுக்குள்ள பாருக்கு போய் கூடுதல் விலை கொடுத்து சரக்கு வாங்கி அடிச்சிப்பாரு... அதோட சுகமே தனிடா"

 

"ஆமாடா அப்பத்தான் சீக்கிரம் சாகலாம்.. குடும்பம்குட்டிய ரோட்டுல தவிக்க விடலாம்..."

 

"அப்றம் சும்மாவா கெடைக்கும் சொகம். மத்த வேலைகளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்த சரக்கடிக்கெறதுக்கும் கொடுத்தாத்தான் வாழ்வின் சூட்சுமங்கள மிதமான சுகத்தோட உணர்ந்துக்க வாய்ப்பு கிடைக்கும். எதுவும் சும்மாலாம் கெடைச்சிடாது. மது சுகத்துக்கு கொஞ்சம் கொஞ்சமா குடும்பத்த பலி கொடுத்துத்தான் ஆகனும். உடலும் சீரழிஞ்சுதான் போகும், சமூகம் ஒதுக்கித்தான் வைக்கும், பக்கத்து வீட்டுக்காரன்ல இருந்து வீதி முழுக்க, ஊர் முழுக்க பெயர் நாறித்தான் போகும். வேட்டி இடுப்புல நிக்காம ரோட்டோரத்துல பிளாட்டாகித்தான் ஆகனும்.. இதெல்லாம் தான் அந்த சொகத்துக்கு நாம குடுக்குற விலை. சும்மா வாயில ஊத்திக்கிட்டு சத்தமில்லாம படுத்துக் கிடந்தாலாம் சுகம் கெடைக்காது. இந்தா ஒரு பெக் போடு..."

 

" டேய் முழுசையும் குடிச்சிட்டு வெறுங்கிளாச நீட்டிட்டு குடி குடினா எப்படிடா.."

 

"ஓ.. ஒங்கிட்ட பேசிட்டே உனக்கு குடுத்ததையும் நான் குடிச்சிட்டேனா... இரு இன்னொரு கோட்ரு வாங்குறேன்"

 

 என்றபடியே தன் சட்டைப்பையில் கைவிட்டு பணமென்று நினைத்து எதையோ எடுத்தான். அது அவன் மகளின் கொலுசை அடகு வைத்த ரசீது.

கவியோவியத்தமிழன்,`*

திண்டுக்கல்.