tamilnadu epaper

ரூ.1,000 கோடியில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

ரூ.1,000 கோடியில்  5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் இண்டோ ஸ்பேஸ் தொழில் பூங்காவில் ரூ.1,000 கோடி முதலீட்டில் மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்தி சேவைகள் திட்டம் அமைக்கப் படும். இதன்மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.