tamilnadu epaper

ரூ.10 கோடியில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள்

ரூ.10 கோடியில் அதிநவீன  தொழில்நுட்பக் கருவிகள்

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தினை உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்திடவும், அங்குப் பயிலும் மாணவர்களின் தரமான தொழில்நுட்பத் திறனை உயர்த்திடவும் கருதி, தமிழ்நாடு அரசு அமைத்த துணைக்குழுவின் பரிந்துரைகளின் பேரிலும், தரம் உயர்த்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களுக்கேற்ப, 6 பாடப் பிரிவுகளுக்கும் முதற்கட்டமாக ரூ. 10 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்.


அச்சு மற்றும் காட்சி ஊடகச் செய்தியாளர்கள் உடனுக்குடன் செய்திகளை விரைந்து அனுப்பிட ஏதுவாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள செய்தியாளர் அறைகளில், நவீன கட்டமைப்புடன் கூடிய கணினி மற்றும் அதிவேக இணையத்தள வசதிகள், ரூபாய் 41 லட்சம் (தொடரும் மற்றும் தொடரா செலவினம்) மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் பெ.சாமிநாதன் கூறினார்.