tamilnadu epaper

லவ் ஸ்டோரி

லவ் ஸ்டோரி

ஞாயிற்றுக்கிழமை.

 

ஞாயிற்றுக்கிழமை என்றாலே சோம்பல் வந்து தானாக ஒட்டிக் கொள்ளும்.

 

 தமிழ்நாடு பண்பலையில் பாடலை ஓடவிட்டு நான் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தேன். டிபன் முடித்தாகிவிட்டது. மதியம் லஞ்சுக்கு ரெடி ஆக வேண்டும்.

 

 நான் காய்கறிகள் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து என்னென்ன செய்யலாம் எதை வைத்து செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, என் மகள் பின்னால் வந்து என்ன மம்மி செய்கிறாய்? என்றாள்.

 

 மதியம் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணுகிறேன் என்று சொன்னேன்.

 

 நான் என்ன ஹெல்ப் பண்ணட்டுமா ?

 

அடடா.. என்ன இன்னைக்கு? மழை கொட்ட போகுது. நானே கூப்பிட்டாலும் வரமாட்டேன்ப. ஒருவேளை செல்லுல 'டேட்டா' தீர்ந்து போச்சா?

 

 என்னம்மா.. இப்படி கிண்டல் பண்ற ?இப்பதானே விடிஞ்சி இருக்கு ?அதுக்குள்ள டேட்டா காலி ஆகுமா? பாவம் நீ ஒண்டியா கஷ்டப்படுற ன்னு சமையல் கட்டுக்கு வந்தேன். இன்னிக்கு அவியல் செய்வோமா? என்றாள்.

 

 தாராளமா செய்யலாம். அதுக்கு வேண்டிய எல்லா காய்கறியும் இருக்கு என்றேன் . 

 

என் கிட்ட உக்காந்து, ஆசையா,

 

 உங்க 'லவ் ஸ்டோரி'ய சொல்லுங்க கேப்போம்னு சொன்னா...!

 

அடடே.. அந்த காதல் காவியத்தை பதினேழு வருஷம் கழிச்சு ஆசையா புள்ள கேக்குதேன்னு 'காதல்ல' ஆரம்பிச்சு , எங்க கல்யாணம் வரை, ஒரே ஃபீலிங்ஸ்சோட சொன்னேன்..

 

முழுசா கேட்டுட்டு இந்த கதையை இனிமேல் உங்க லைஃப்ல யாருகிட்டையும் சொல்லீராதீங்க .

 

எல்லாரும் என்னைய மாதிரி அமைதியா உக்காந்து கேக்க மாட்டாங்க, அவ்வளவு மொக்கையா இருக்குன்னு எந்திரிச்சு போய்ட்டா...

 

நான் சிவனேன்னுதானே இருந்தேன்?

 

 நீயா வந்த, கேட்ட, கழுவி ஊத்திட்டு போற.....?

 

 

பிளடி 2K கிட்ஸ்..

 

 உங்களுக்கெல்லாம் அலைபாயுதே படத்தோட அருமை எங்க தெரிய போகுது.?

 

இவளை என்ன பண்ணலாம் இன்னைக்கு ,நோ அவியல்! வெறும் பாகக்காய் சாம்பார் வெண்டைக்காய் பொரியலும் தான்.

 அதுதான் இவளுக்கு பனிஷ்மென்ட்.

 

ஆர். சுந்தரராஜன்,

சிதம்பரம்-608001.