tamilnadu epaper

வந்தவாசியில் மகாவீரர் ஜெயந்தி விழா..!

வந்தவாசியில் மகாவீரர் ஜெயந்தி விழா..!


வந்தவாசி, ஏப் 11:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் மகாவீரர் ஜெயந்தி விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், நூல் வெளியீட்டு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழாவாக தேரடி அருகில் ஜைனர் கோவில் எதிரே நடைபெற்றது. இந்த நிகழ்வில் மடாதிபதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான ஜைனர்கள் பங்கேற்றனர். மாலை மகாவீரருக்கு மலர் மாலைகள் சாற்றப்பட்டு வீதியுலா கோலாட்டத்துடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் உடன் வந்தனர்.