tamilnadu epaper

வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு

வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு


வந்தவாசி, ஏப் 11:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தேறியது. பிறகு உற்சவ மூர்த்தி மேளதாளத்துடன் கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார். இந்த நிகழ்வில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.