*வரம் வேண்டும்*...
முந்தி வந்த மோகத்தை முந்தி விரித்து தீர்வு தந்த பாவை.
அந்தி பொழுதெல்லாம் அலைக்கழிப்பாய் அவள் நினைவு.
ஓராயிரம் உறவுகளைக் கடந்து வந்தேன்.
உன் உறவு சிறந்தது என்று கண்டேன்.
தாயோடு முடியாத வாழ்க்கை.
துணையோடு தொடர வேட்கை.
காலம் தந்த வலியை மாற்றினாள் .
காளை என் வழியையும் நல்வழி படுத்தினாள்.
பார்வையால் ஒரு வாசகம் நான் எழுத.
பக்குவமாய் அதை படித்து முடிப்பாள்.
யோசனை செய்து நான் நிற்க
விடையளித்தாள் நான் வியக்க.
இறைவனிடம் இன்றும் நான் கோபம்.
பாதியில் பறித்துக் கொள்ள நான் பாவம்.
இணையாய் வந்த துணையே.
உன்னை இழந்து நான் தனியே.
யாரோடும் பொருந்தாத வார்த்தையை.
எனக்குள் வைத்துக் கொள்கிறேன்.
வாழ்வின் அர்த்தம் தந்தவள் நீ.
அர்த்தமற்றதாய் ஆக்கிச் சென்றாய்.
மீண்டும் ஒரு பிறவி காய் காத்திருக்கிறேன்.
அப்போது நீயே என்
நிரந்தரமாய்.
துணையாய்.
வருவாய்.
வரமாய்...