tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷாமுத்துராமன்)-05.05.25

வாசகர் கடிதம் (உஷாமுத்துராமன்)-05.05.25


அன்புடையீர்,


வணக்கம் தமிழ்நாடு இ பேப்பர்.காம் 5.5.25 அன்றைய நாளிதழில் முதல் பக்கத்தில் பிரதமருடன் விமானப்படை தலைமை தளபதி சந்திப்பு என்ற செய்தி வடக்கே என்ன நடக்கிறது என்று அழகாக சொன்னது பாராட்டுக்குரியது. இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புதமான திங்கள் கிழமையை எனக்கு காட்டியது.


திருக்குறள் என்றாலே அதன் மீது ஒரு ஆசை எப்போதும் உண்டு தினமும் ஒரு திருக்குறள் பகுதியில் வந்த திருக்குறளும் பொருளும் மிகவும் அருமை மனம் விரும்பி படிக்க வைத்தது கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்திய வேளாண் கல்வி மாணவர்களை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. இதனால் வேளாண் துறை நன்றாக வளர வேண்டும்.


நலம் தரும் மருத்துவம் பகுதியில் ஆண்களுக்கு ஆபத்தாகும் பெருங்குடல் புற்று நோய் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை சொன்னது மிகத் தெளிவாக விரிவாக பிரசூதித்தது பயனுள்ள தகவல். சாராயம் காய்ச்சிய மகன் தந்தை உட்பட மூன்று பேரை கைது செய்தது நல்ல செயல் இதனால் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு ஒரு மனம் பீதி வருவது உண்மை.


அரசியல். in என்ற பகுதியில் வந்த நீங்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும் என்று பல்ஹான் தாக்குதல் விவகாரத்தில் ராஜினாத் சிங் உறுதி சொன்னது நல்ல தகவல். நீட் அச்சத்தில் மாணவி தற்கொலை என்ற செய்தியை வருத்தமாக இருந்தது.


தினம் ஒரு தலைவர்கள் பகுதி ஒரு அறிவுக்கு விருந்தளிக்கும் களஞ்சியம் என்று சொல்லலாம். இன்று காயிதே மில்லத் அவர்களின் வரலாறு அரசியல் பற்றிய அவருடைய வாழ்க்கைப் பகுதி நன்றாக புரிந்தது.


பல்சுவை களஞ்சியம் பகுதியில் வந்த ஜில்....ஜில்.... தொட்டபெட்டா என்ற பகுதியைப் படித்த உடனேயே சென்று குளுகுளு இடத்தில் இருப்பது போல. மகிழ்ச்சி வந்தது. மீம்ஸ் விடுகதை ஜோக்ஸ் எல்லாமே மிக அருமை பாராட்டுக்கள்.


பன்முகம் பக்கத்தில் வந்த எல்லா தகவலும் மிகவும் அருமை. காதலிப்பது எப்படி என்று பகுதியை படித்தவுடன் இதுபோல சொல்லிக் கொடுப்பவர்கள் அன்று இருந்திருந்தால் நாமும் காதலித்திருப்போமோ என்ற எண்ணம் வந்தது பாராட்டுக்கள்.


முதலைமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா என்ற செய்தியை படமும் மிகவும் அருமை அந்த பக்கத்தில் வந்த எல்லா தகவலுமே அரசியல் ஆன்மீகம் என்று கலந்து வந்ததால் ஆர்வமுடன் படிக்க வைத்தது. இன்று முதல் கத்ரி வெயில் சுட்டெரிக்கும் என்று அக்னி நட்சத்திரம் தொடங்கிய செய்தியை படித்தவுடன் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.


மது போதையில் 12 பேர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது என்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த அந்த தகவலை படித்தது அதிர்ச்சியாக இருந்தது. குடிபோதையில் கார் ஓட்டுபவர்களுக்கு நல்ல தண்டனை கொடுக்க வேண்டும் என்று எண்ணியது.


இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடந்த படமும் செய்தியும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த போர் எப்போது முடிவருமோ என்று எண்ணினேன் .


நீட் தேர்தல் பற்றிய தகவல்கள் எல்லாமே அதிர்ச்சியாக இருந்தது. நீட் வினாத்தாள் முறைகேடு ரூபாய் 40 லட்சத்துக்கு விற்கும் முயன்ற மூன்று பேர் ராஜஸ்தானில் கைது என்ற செய்தி படித்தவுடன் நீட்டிற்காக பகல் இரவாக படிக்கும் பிள்ளைகளின் நினைவு வந்து வேதனையாக இருந்தது.


இந்தியாவுக்கு 131 மில்லியன் டாலர் மதிப்பிலான கடல்சார் பாதுகாப்பு மென் பொருள் மற்றும் உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்தது நல்ல தகவல். அயல்நாட்டில் இருந்தாலும் என்னென்ன செய்திகள் நடக்கின்றன என்று மிக அருமையான தகவல்களை சொல்லி எங்களின் ஒவ்வொரு புதிய விடியலையும் வசந்தமாக மலர வைக்கும் தமிழ்நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷாமுத்துராமன்