tamilnadu epaper

வாசகர் கடிதம் (சிவ. சே. முத்துவிநாயகம்)-07.05.25

வாசகர் கடிதம் (சிவ. சே. முத்துவிநாயகம்)-07.05.25


தேசியமும் தெய்வீகமும்

எனது இரு கண்கள் என்று சொன்னவர் . வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கம்.

வரலாறு வெளியிட்டது

பெருமை.

     உத்தரப் பிரதேசத்தில் 

நடனமாடிய மணப்பெண் மரணச் செய்தி வேதனை.

இப்படிப் பட்ட திடீர் மரணங்கள் காலத்தின் கோலம் தான்.

     “ஆத்திரம் அவசரத்துக்கு நாலு பேர் வேணும்” என்று சொன்னது ஒரு காலம்.எத்தனை கருத்து வேறுபாடுகள் வந்தாலும்

நல்லது கெட்டது போன்ற குடும்ப நிகழ்வுகளில் உறவுகள் கூடி

இருப்பது வழக்கம். உணர்வு பூர்வமான உறவு வலுப்பெற்றது. அறிவியல் முன்னேற்றம் 

காசிருந்தால் போதும் யார் உறவும் வேண்டியதில்லை என்று

மனித உணர்வுகளை மறக்கடித்து விட்டது.

     மாறிப் போனது உறவுகளே தவிர உலகமல்ல.

 வருங்காலத்தில்

வாசலில் வரவேற்க ஒரு ரோபோ வைக்கின்ற காலம் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

      மருத்துவர்களின் மருந்துச் சீட்டில்லாமலே சில மருந்துகளைப் பெற அனுமதிக்கும் ஆலோசனை வரவேற்கத் தக்கதே.

     வைரஸ் தொற்றுக்குக் கண்டிப்பாக ஆண்டிபயாட்டிக் எடுக்கக் கூடாது சரியான வழிகாட்டல் .அப்படியானால் மருத்துவர்களிடம் போய்த் தானே ஆக வேண்டும். விழிப்புணர்வு இல்லாமல் தாமாகவே மருந்தெடுத்து அதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மருத்துவர்களிடம் போனால் ஒருநாள் காக்க வைத்து விடுகிறார்களே.

அன்றாடப் பணி பாதிக்குமே என்று பலரும் அவரவராக மாத்திரையை வாங்கி விழுங்குவது வழக்கமாகி விட்டது.ஒவ்வொரு நோயாளிக்கும் 

 குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் நோயாளியைக் காக்க விடாமல் மருத்துவம் பார்த்து அனுப்ப மருத்துவர்கள் முயற்சிக்க வேண்டும்.

     வாழையடி வாழையின் பொருளை இளந்தலைமுறைகள் அவசியம் அறிய வேண்டும். அதற்கு முனைவர் உமாதேவி பலராமன் கட்டுரை உதவும் என்பதில் ஐயமில்லலை.

      நிறை குறைகள் எதனைச் சுட்டினாலும்

எவ்விதத் தணிக்கையும் 

செய்யாமல் அப்படியே வெளியிடும் தமிழ்நாடு இ செய்தித் தாளைப் பாராட்டுகிறேன் .நல்ல செய்தித் தாளுக்கு அழகு.மென்மேலும் வளரும். நன்றி.


-சிவ. சே. முத்துவிநாயகம்

திருநெல்வேலி