tamilnadu epaper

வாசகர் கடிதம் (ஜெயந்தி சுந்தரம்)-07.05.25

வாசகர் கடிதம் (ஜெயந்தி சுந்தரம்)-07.05.25

07-05-2025 விமர்சனம்


 

 கண்ணில் பட்ட முதல் செய்தி. இனி இந்தியாவின் தண்ணீர் இந்தியாவுக்கே. சிந்து நதி ஒப்பந்தம் குறித்து நமது பிரதமர் மோடி.

 ஒரு அளவு பொறுக்க முடியும். சாது மிரண்டால் காடு கொள்ளாது. எவ்வளவு நல்லவர்கள் இந்தியர்கள். நாம் வளர்ந்து வந்த விதம் அப்படி. நமக்கே இப்படி தண்ணி காமித்தால், என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.


 அடுத்த செய்தி இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இரண்டு நாள் ஒரு பயிற்சி நடத்தும் இந்திய விமானப்படை. யாருக்கும் போர் பிடிக்கவில்லை தான். ஆனால் வந்த சண்டையை விட முடியாது. மேலும் நாடு முழுவதும் 300 இடங்களில் போருக்கான ஒத்திகை. ஜெய்ஹிந்த்.


 இது ஒரு புறம் இருக்க நமது முதல்வர் ஸ்டாலின் ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்கிறார். மேலும் கூறியது 2026 இல் நடக்க போகும் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று ஏழாவது தடவையாக ஆட்சி அமைப்போம் என்கிறார். மேலும் அவர் கூறுகையில் எதிர்க்கட்சிகள் நியாயமான கருத்துக்களை வைத்தால் நாங்கள் அதை ஏற்கிறோம் என்றார். அது அவதூறு பரப்பும் விமர்சனமாக இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மேலும் போர் ஒத்திகை பற்றி மத்திய அரசு எங்களிடம் எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்.


 சென்னை மட்டும் புறநகர் பகுதியில் மழை. பராவாயில்லை இந்த முறை கோடை மழை முன்னமே ஆரம்பித்துவிட்டது. சிலருக்கு மழை ராசி உண்டு. முன்னாள் முதல்வர் ஜெ அவர்களுக்கும் இவர் போல் மழை ராசி உண்டு. நல்லது.


 இன்னும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வருவோம்.


** சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள். திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லும் பேருந்துகள் ஆய்வு செய்கிறார்கள் பரவாயில்லை நல்ல விஷயம். போதை இல்லா வாழ்க்கை: நாகர்கோவிலில் மாரத்தான்.


 சிலை கடத்தல் முன்னாள் ஜி ஜி பொன் மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை. வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது உன் மாணிக்கவேல் அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது விசாரணையை பாதிப்பதாக இருக்கிறது. அதனால் அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என்றும் அவருடைய கடவுச்சீட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

 நாடு முழுவதும் மே 20 ஆம் தேதி நடக்கப் போகும் வேலை நிறுத்தத்துக்கு பாதுகாப்புத் துறை ஊழியர்கள் ஆதரவு.

 மேலும் சென்னையில் நாலு வார்டுகளுக்கு உடனடியாக தேர்தல் ஒரு லட்சம் பேர் வாக்களிக்கின்றன. வண்டலூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் ஒரு டிரைவர் வெட்டிக்கொலை. மர்ம கும்பலின் வெறிச்செயல் விசாரணை நடந்து வருகிறது.

 நலம் தரும் மருத்துவத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு ஆண்டிபயாட்டிக் எடுக்கலாமா என்கிற கட்டுரை அருமை. நல்ல விழிப்புணர்வான கட்டுரை.

 மூப்பனார் அவர்களின் நினைவிடத்தை அகற்றுவதாக புறப்பட்டு இருக்கும் செய்தி வதந்தி என்று செல்வ பெருந்தகை அவர்கள் கூறினார். திட்டமிட்டே பரப்பப்படும் வதந்தி என்றார் அவர்.

 சரியா போச்சு விஜய்க்கு சால்வை அளிக்க வந்த அவருடைய ரசிகரின் தலையில் துப்பாக்கியை வைத்து காவலாளர் மிரட்டல். ரசிகர் கூறியது என்னவெனில் விஜய் அவர்களின் பாதுகாப்புக்காக இவ்வாறு அவர்களுடைய பாதுகாவலர்கள் செய்தனர் எனக்கு எதுவும் காயம் இல்லை என்றார் அவர். பரவாயில்லை நல்ல ரசிகர். இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டார்.


 அரசியல் செய்திகள் ரொம்பவும் சுவாரசியமாக இருக்கின்றது. பா ஜனதாவிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது என்றார் திருமாவளவன் அவர்கள். எந்த அளவிற்கு உண்மை என்று போக போக தெரியும்.


 நீட் தேர்வில் இருந்து விளக்கு பெற முதல்வர் போடும் அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த வருடமும் 20 லட்சம் பேர் தேர்வு எழுதி ஆகிவிட்டது. இதற்கு மேலும் என்ன. தமிழகத்து மாணவர்கள் எல்லாவற்றுக்கும் தயார். அடுத்த தேர்வில் டாப் ஸ்கோர் எடுப்பதற்கும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. இதுவும் கடந்து போகும் என்பதாகிவிட்டது. அடுத்த செய்தியில் நீட் தேர்வில் சில மாநிலங்களில் முறைகேடு ஈடுபட்ட ஏழு பேர் கைது.


 சரியா போச்சு வக்பு திட்டத்திற்கு எதிராக வழக்கு அரசியலமைப்பை பாதுகாக்க நாங்கள் போராடுவோம் என்றார் தவெக தலைவர். ஏன். தேவையில்லாமல் ஊதிகிட்டு என்கிறார்கள் ஒரு சாரார். 


கதைகள், கவிதை, நூல் விமர்சனம் அவதாரம், அனைத்தும் அருமை.

 தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வரலாறு அருமை.


 பல் சுவை களஞ்சியத்தில் மாறி போன உறவுகள் நல்ல கட்டுரை.

 குழந்தைகளின் கை வண்ணம் அருமை. குறிப்பாய் அதில் வந்த மந்திரவாதி அந்த கதையும் அருமை.


க்ரைம் கார்னரில் முதல் செய்தி அதிர்ச்சியாக இருந்தது. கட்சிகள் ஒரு பக்கம் இருக்கட்டும் ஒரு பெண் என்று கூட பாராமல் அப்படியா தலையை தூண்டித்துக் கொள்வார்கள். இந்தியாவிலா அப்படி நடக்கிறது? அதுவும் தமிழ்நாட்டில் உள்ள பட்டுக்கோட்டையில் இவ்வாறு நடந்து இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எது எப்படியோ வன்முறை பெருகிவிட்டது.


 உலகச் செய்திகளில் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா ரஷ்யா ஜப்பான் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. ராணுவ நடவடிக்கை மூலம் காஷ்மீரை மீட்க இந்தியா திட்டம். டெல்லி செங்கோட்டைக்கு உரிமை கோரி வழக்கு தொடுத்த பெண் தாக்கல் செய்த மனு தள்ளுபடி. அடுத்து இந்தியா கேட் எங்க வீட்டு வாசல் பக்கம்னு யாரும் கிளம்பாமல் இருக்க வேண்டும். ராஜஸ்தானில் இருபது லட்சம் லஞ்சம் ஆகிய எம்எல்ஏ கைது. இன்னும் விவரம் வரும். காசாவை முழுமையாக கைப்பற்ற திட்டம். இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல். பாகிஸ்தானில் உள்நாட்டு கலவரம் ராணுவத்திற்கு ஆதரவளிக்க பொதுமக்கள் எதிர்ப்பு. யாருக்கும் போர் பிடிக்கவில்லை. 


எப்பிஐ ஏஜென்ட் என்று நாடக மாடிய இந்திய மாணவர் கைது. மாணவர்கள் மூளையை நல்ல விதமாக செலுத்தினால் நல்லது. பாகிஸ்தான் துறைமுகத்துக்கு வந்த துருக்கி போர்க்கப்பல். இந்தியாவின் ரபேல் விமானங்கள் தயார். 



-ஜெயந்தி சுந்தரம்