tamilnadu epaper

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் )-21.05.25

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் )-21.05.25


தமிழ்நாடு இ பேப்பரின் அதி அதிகாலை வருகை 

பிரம்ம பூரணம்.

புத்துணர்வு பொங்கும் இதமான தருணம்.

அளவற்ற ஒளிநல்லான் அருணன் அருள் கூர்ந்து வான் பரப்பில் அடியெடுத்து வைக்கும் முன்பே, பேதமில்லா 

பேருள்ளத்தில் 

எல்லார்க்கும் ஒரே நேரத்தில் தரிசனம் காட்டி, தடம் பதிக்கும் 

தமிழ் நாடு இ பேப்பரே!

தலை தாழ்ந்து வணங்குகின்றேன்.

தரணி நலம் காக்கும் கோரிக்கை ஒன்றை 

நீண்ட காலம் காத்திருந்த பின்னரே 

அகம் திறக்கிறேன்!

சுயநலம் ஏதுமின்றி 

சுற்றும் பூமி

சுகப்பட வேண்டும் என்றே 

சுருக்கக் கருத்தில் 

வாசக சொந்தமென்ற 

வளமார்ந்த உரிமையில் 

உன்னத நோக்கம் 

நிறைவேற வேண்டி 

நெஞ்சம் உருகி 

வேண்டுகிறேன். 

இருபது லட்சம் தாண்டிய தமிழ் நாடு இ பேப்பரின் வாசக சொந்தங்கள் அனைவரையும் சற்று செவிமடுக்க வேண்டுகிறேன்...


இந்த பிரபஞ்சத்தில் 

காற்று, நீர், ஆகாயம் என்று எத்தனை எத்தனையோ விஷயங்களை விலை கொடுக்காமலே, காலம் காலமாக இலவசமாக பெற்று 

தொடர்ந்து அனுபவித்து இன்புற்று வருகிறோம்.தவறில்லை...தப்பில்லை !

ஆனால் இதற்கு பிராயச்சித்தமாக இந்த பூமிக்கு....

போரென்னும் பொல்லா அரக்கனால் 

பெருந்துயரை நீண்ட நெடுங்காலமாக அனுபவித்து அல்லல் பல பட்டு வரும் இந்த பூமிக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?

ஒரு நாளைக்கு 1440

நிமிடங்கள்... இதில் ஒரே ஒரு நிமிடத்தை 

போரில்லாத புதிய பூமி உருவாக வேண்டும் பிரார்த்தனைக்காக 

ஒதுக்க வேண்டும் என்பது தான் நமது 

பணிவன்புடன் கூடிய வேண்டுகோள்.

உள்ளார்ந்த நேயத்துடன் நாம் செய்யும் பிரார்த்தனை 

க்கு வலிமை அதிகம்.

நாம் நினைத்துப் பார்த்திராத அற்புதங்களை நிகழ்த்தும் பேராற்றல் கூட்டுப் பிரார்த்தனை க்கு உண்டு.இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட உண்மை.


நாம் மனப்பூர்வமாக பண்ணும் இந்த பிரார்த்தனை எப்படி போரில்லா உலக அமைதியைக் கொண்டு வரும் என்கிறீர்களா?


உலகில் சுமார் 200 நாடுகள் உள்ளன.

இந்த தேசங்களின் தலைவர்கள் எல்லாம் 

நேரில் கூட வேண்டாம்... இன்றைய தொழில் நுட்ப மேன்மையான இணையம் வழியாக 

ஒன்று கூடி ஒரு தீர்மானம் நிறைவேற்றினால் போதும்...அதாவது,

எந்த நாடும் எந்தக் காரணம் கொண்டும் எந்த நாட்டோடும் போர் தொடுக்கக் கூடாது...

எந்தப் பிரச்சினையையும் 

சுமுகமாக பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.


இன்றைய சூழலில் இது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்...

ஆழ்ந்தகன்று யோசித்துப் பார்த்தால் 

சாத்தியம்... சாத்தியமே!


சில வருடங்களுக்கு முன்பு கொரோனா என்னும் ஒற்றை வைரஸ் இந்த உலகையே தலை கீழாகப் புரட்டி வேடிக்கை பார்த்ததை நாம் அனைவரும் அறிவோம். நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத காரியங்கள் 

அந்தக் கால கட்டத்தில் நடந்தேறின. இதை இந்த தருணத்தில் ஏன் குறிப்பிடுகிறோம் என்றால்... நாம் அனைவரும் போரில்லா உலகம் வேண்டி பண்ணும் பிரார்த்தனை பிரபஞ்ச ம் மூலமாக நிறைவான பலனைத் தரும்.

அனைத்து உலகத் தலைவர்களையும் ஒன்று கூட வைக்கும்.

மகத்துவம் மிக்க 

மேலே நாம் குறிப்பிட்ட 

மகா தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி வைக்கும் இனிய தருணத்தை உருவாக்கித் தரும் நிச்சயமாய்...

போரில்லாத உலகம் இங்கே நிரந்தரமாகி விட்டால், உலகில் எந்த நாட்டிலும் ராணுவ பட்ஜெட்டே இல்லாத 

அதி அற்புத சாதனைக்கு வழி கண்டு விடலாம்.

இதன் மூலம் உலகை 

காலம் காலமாக அச்சுறுத்தி கொண்டிருக்கும் 

வறுமை, அறியாமை,

பிணி ஆகியவற்றிலிருந்து 

விடுதலை பெற்ற 

புத்தம் புது பசுமை பூமி 

இங்கே உருவாகும்.

இதனால் கலி யுகத்தில் இருந்து கிருத யுகத்துக்கே மாறும் அதிசயமே இங்கே நிகழலாம்...

இது வெறும் கற்பனை அல்ல.. திட சிந்தனையும் தெளிந்த நம்பிக்கையும் தூய அன்பும் இணைந்தால் இதெல்லாம் சத்திய சாத்தியமே... சாத்தியமே!

தமிழ் நாடு இ பேப்பரின் லட்சக்கணக்கான வாசக சொந்தங்களை 

இந்த அதி அற்புதமான 

போரில்லா உலகம் காணும் இலட்சியப் பயணத்தில் சங்கமித்து சரித்திர 

சாதனைக்கு சொந்தக் காரர்களாகும் பாக்கியத்தை பெறுவார்களாக...

இதற்காக வேறெதுவும் 

விலை கொடுக்க வேண்டாம்...

தினசரி ஒரே ஒரு நிமிஷம் பிரார்த்தனை...


தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுவினரின் நல்லாதரவோடு ஆசியோடு, நமது வாசக சொந்தங்களை மீண்டும் மீண்டும் வேண்டுவது இது தான்...

போரில்லா உலகுக்காக தினசரி 

ஒரே ஒரு நிமிஷம் ப்ளீஸ்... பிரார்த்தனை 

புரியுங்கள்... பேரன்பு பயணத்தில் இணைந்ததாய் பெருமிதம் கொள்ளுங்கள்.

அசைக்க முடியாத பெறற்கரிய

புண்ணியத்தை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.

வாழ்க வையகம் 

வாழ்க வளமுடன் 

வாழ்க நலமுடன் 



-நெல்லை குரலோன் 

பொட்டல் புதூர்