முகில் தினகரன்" />
மண்ணச்சநல்லூர் பாலசந்தர் எழுதிய " நான் பார்த்த..." சிறுகதை அவன் பார்த்த பெண்ணும், வீட்டில் அவனுக்காக பெற்றோர் பார்த்த பெண்ணே ஒருவரே என உணர்த்தியது.
முகில் தினகரன் எழுதிய " தட் இஸ் கலைச்செல்வி" கல்லூரியில் அவளை ரேகிங் செய்த பரசுராமிற்கு வேலை கொடுப்பதே அவனைப் பழிவாங்கத்தான் என்றது அவள் துணிச்சலைக் காட்டியது.
ரோஸ் வாட்டருடன் க்ளிசரின் கலந்து பாதத்தில் தடவினால் பித்த வெடிப்பு மறையும், ஷேவிங் செய்த பின் முகத்திற்கு பயன்படுத்தினால் எரிச்சல் , அரிப்பு குறையும், ரோஸ் வாட்டரை 1 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து, பின் வெளியே எடுத்து காட்டனில் நனைத்து கண் மேல் ஊற வைத்தால் கண்களின் வீக்கம் குறையும் என்பதை பல்சுவைக் களஞ்சியம் மூலம் அறிந்தேன்.
-ஸ்ரீகாந்த்
திருச்சி